தமிழ்நாடு

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்வு...

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

Malaimurasu Seithigal TV

கொரோனா பரவல் காரணமாக அதிமுக உள்கட்சி தேர்தல் நடத்தப்படாமல் தள்ளிப்போன நிலையில், வரும் 13 முதல் 23ஆம் தேதி வரை அதிமுக உட்கட்சி நடைபெற உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான வேட்புமனு தாக்கலும் நிறைவடைந்தது.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர், மீண்டும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு விருப்ப மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது.

ஆனால், இருவரைத் தவிர வேறு யாரும் போட்டியிடாததால், தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது. இந்த நிலையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் அறிவித்தார். 

பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே, ஒ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மீண்டும் ஒருங்கிணைப்பாளர்களாக தேர்வானதால், கட்சி அலுவலகத்தில் அவர்களது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.