தமிழ்நாடு

கூட்டு பாலியல் வன்கொடுமையால் இளம்பெண் மரணம்... தஞ்சையில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்...

தஞ்சை மாவட்டம் சூரியக் கோட்டை கிராமத்தில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மாதர் சங்கத்தினர் பிரேத உருவபொம்மை உடன் கண்ணீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Malaimurasu Seithigal TV

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள சூழியக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவரது மகள் முப்பத்தி ஒரு வயது உடைய திருமணமாகாத இளம் பெண் கனகவல்லி கடந்த மாதம் 25ஆம் தேதி ஆடுகளை மேய்க்க சென்ற போது அங்குள்ள காட்டுப்பகுதியில் உடைகள் களையப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

கனகவல்லி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இருக்கலாம் என சந்தேகம் எழுந்த நிலையில், அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 12 மணி நேரத்தில் பெரியசாமி மற்றும் சதீஷ் ஆகிய இருவரை கைது செய்தனர். 

மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தமிழக அரசு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி அம்மாபேட்டை பேருந்து நிலையம் பகுதியில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இறந்துபோன கனகவல்லி போன்ற உருவ பொம்மையை கையில் ஏந்தி கண்ணீர் கோரிக்கையுடன் பெண்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.