நவம்பர் 14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக முதல்வர் விஜய் இன்று கொளத்தூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் குழந்தைகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கினார்..
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு, தமிழ்நாடு அரசு சாரிப்பில் கேக் வழங்கும் அரசாணை வெளியிட்டது. இதில் கேக்குகளான செலவிற்காக 9.27கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தைக்கு 45 கிராம் எடையுள்ள கேக் வீதம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மற்றும் பணியாளர்களுக்கும் கொடுக்கும் வகையில் 61.84 லட்சம் கேக்குகள் வழங்கப்படவுள்ளது.
குழந்தைகளுக்கு கேக்குடன், விஜய் புகைப்படம் அச்சிடப்பட்ட வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டன. வாழ்த்து அட்டையின் முன்புறம், “ஆல் இஸ் வெல், கான்பிடன்ட்டா இருங்க” என்றும் “பிரியமுடன் விஜய்” என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. வாழ்த்து அட்டையின் பின்புறம், மாணவர்களுக்கான கால அட்டவணை இடம் பெற்றுள்ளது. இதற்காக, பிரிட்டானியா, டீரிம் பேக், ஐ.டி.சி., எலைட் நேச்சுரல் ஆகிய நிறுவனங்களின், பல்வேறு வகையான 'கேக்'குகள் வாங்கப்பட்டன.
குழந்தைகள் தினமான நாளை (சனிக்கிழமை) அரசு விடுமுறை என்பதால், இன்று 'கேக்' வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கொளத்தூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் குழந்தைகளை சந்தித்து கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கினார் முதல்வர் விஜய்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.