தமிழ்நாடு

கார்த்திகைக்குப் பின், இயல்பு நிலைக்கு மாறிய பூக்களின் விலை...

கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் பூக்களின் விலை சரிவை சந்தித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

சென்னை | கோயம்பேடு அங்காடிக்கு மதுரை, வேலூர், ஓசூர், சேலம், திண்டுக்கல் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து லாரிகள் மூலம் பூக்கள் வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிப்பூ ரூ.2000த்திற்கு விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் இன்று பூக்களின் விலை குறைந்துள்ளது.

இன்று கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் அலங்காரத்திற்காக அதிக அளவில் மக்கள் பூக்களை வாங்க வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதன் படி, இன்றைய தினம் ஒரு கிலோ மல்லிப்பூர் ரூ.1500க்கும், முல்லை ரூ.900க்கும், ஜாதி ரூ.600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.. அதேபோல், சாமந்தி கிலோ ரூ.50 முதல் 80க்கும், ரோஜா கிலோ ரூ.100 முதல் 120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு பூக்களின் விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.