தமிழ்நாடு

ஆக்ரோசமாக உறுமிய ஆட்கொல்லி புலி....ஆரோக்கியமாக இருப்பதாக வனத்துறை தகவல்..

நேற்றைய தினம் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட ஆட்கொல்லி புலி, மயக்கம் தெளிந்ததும் ஆக்ரோசமாக உறுமியதாகவும், ஆரோக்கியமாக இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Malaimurasu Seithigal TV

நீலகிரி மாவட்டம் மாயார் வனப்பகுதியில் நேற்று மயக்க ஊசி செலுத்தி பிடிபட்ட T23 புலி மைசூர் உயிரியல் பூங்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது புலி மயக்கம் தெளிந்து கூண்டினுள் சத்தமாக உறுமி வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

உயிரியல் பூங்காவில் உள்ள மறுவாழ்வுை மைய கால்நடை மருத்துவர்கள் புலியின் உடலின் பல்வேறு பகுதிகளிலுள்ள காயங்களுக்கு சிகிச்சயளிக்கப்படுவதாகவும், தற்போது நீர் சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகை நோயால் புலி சோர்வுடன் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.