தமிழ்நாடு

”அதிமுக - பாஜக கூட்டணி முறிவு நாடகம் போல்தான் தெரிகிறது” - சேகர்பாபு

Tamil Selvi Selvakumar

அதிமுக-பாஜக கூட்டணி முறிவு நாடகம்போல தெரிவதாக அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை ஆணையரகத்தில் கோயில்களில் வழங்கப்படும் உணவு மற்றும் பிரசாதத்தின் தரம் குறித்து தனியார் நிறுவனம் மூலம் ஆய்வு செய்யும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சி அமைந்த பிறகு இதுவரை ஆயிரத்து 75 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த இரண்டரை ஆண்டுகளில் 5 ஆயிரத்து 217 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட இந்து சமய அறநிலையத்துறையின் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

தொடர்ந்து பேசியவர், அதிமுக - பாஜக கூட்டணி முறிவு நாடகம் போலதான் எங்களுக்கு தெரிவதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.