தமிழ்நாடு

3 ஆண்டுகள் சமரசம் செய்தது போதும், இனி முடியாது...அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை ஒத்திவைக்க ஓபிஎஸ் முடிவு ?

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஒத்தி வைக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tamil Selvi Selvakumar

ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஓபிஎஸ் இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜு, தம்பிதுரை உள்ளிட்டோர் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது கடந்த 3 ஆண்டுகளாக சமரசம் செய்து கொண்டது போதும் எனவும் இனி சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து தனது ஆதரவு நிர்வாகிகள் சுமார் 250 பேரிடம் தீர்மானத்தில் ஓபிஎஸ் கையெழுத்து பெற்றிருப்பதாகவும், கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தை அவர் ஒத்தி வைக்க முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.