திருவண்ணாமலை போளூர் சாலையில் அம்மா இல்லம் என்ற பெயரில் மாவட்ட அலுவலகம், கணினி பயிற்சி கூடம், தையல் பயிற்சி கூடம் உள்ளிட்ட வகையில் இயங்கி வந்தது.
இந்த நிலையில் அம்மா இல்லம் இருந்த இடத்தை மற்றொரு அதிமுக பிரமுகர் ஒருவர் விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. அவர் நேற்று இரவு ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு அம்மா இல்லத்தை இடித்துள்ளார்.
அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக போற்றப்படும் ஜெயலலிதா பெயரில் செயல்பட்டு வந்த அம்மா இல்லத்தை அதிமுக பிரமுகரே இடித்து நொறுக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.