கரூர் மாவட்டம் கோடங்கிபட்டியில் திமுக முப்பெரும் விழா இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. மழை பெய்தாலும் கூட திமுக தொண்டர்கள் நாற்காலிகளை எடுத்து தலைக்கு மேல் வைத்துக் கொண்டு நின்றனர். இந்த முப்பெரும் விழாவை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாடு செய்திருந்தார்.
செப்டம்பர் 17 -ஆம் தேதியான இன்று, பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்த நாள், திமுக கட்சி துவங்கப்பட்ட நாள் என இந்த நாளை முப்பெரும் விழாவாக திமுக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. மேலும் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு விருதும் இந்த விழாவில் வழங்கப்படும். அந்தவகையில், இந்த ஆண்டு பெரியார் விருது கனிமொழிக்கும், அண்ணா விருது சுப.சீதாராமனுக்கும், வழங்கப்பட்டது. மேலும் இந்த முப்பெரும் விழாவில் சிறந்த நிர்வாகிகள் 16 பேருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தொடர்ந்து மேடைக்கு வந்த ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இது கரூர் இல்லை. திமுக -வின் ஊர். இதே நாளில்தான் இதேபோல் ஒரு கொட்டும் மழை நாளில்தான் அறிஞர் அண்ணா நமது கட்சியை துவங்கி வைத்தார். நமது கட்சி தற்போது நூற்றாண்டு விழாவை காணப்போகிறது. கொட்டும் மழையிலும் உணர்ச்சிப்பெருக்கோடு நிற்கும் உங்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது. திமுக தொண்டர்களைப் போல கொள்கை உணர்வோடு கடுமையாக உழகிக்கக்கூடியவர்கள் எந்த இயக்கத்திலும் இல்லை. கழகம் நம்மை காத்தது நாம் கழகத்தை காக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களைப் போன்ற தொண்டர்கள் இருக்கும் வரை எந்த கொம்பனாலும் நமது கழகத்தை தோற்கடிக்க முடியாது. 14 வயதில் கழகம் கழகம் ஓடிய என்னை உங்களுக்கு தலைமை தொண்டனாக்கியது நீங்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறு செய்வது காவி கொள்கை. 2000 ஆம் ஆண்டுகளாக திராவிடம் அந்த கொள்கைக்கு எதிராக போராடி வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்ன கூட எதிர்க்கட்சி தலைவர் என்ன பேசினார், கடந்த அதிமுக ஆட்சியை காப்பாற்றியதே பாஜக தான் என உண்மையை பேசிவிட்டார், இந்த கைப்பாவை அரசை மக்கள் விரும்பாததற்கு நாம்தான் காரணம் என பாஜக நம் மீது வன்மத்தை கொட்டிக்கொண்டு இருக்கிறது. அதன் பிறகு தமிழகத்தில் வந்த கட்சிகள் எல்லாமே திமுக -வை அழிப்போம் என்றார்கள்.
ஆனால் நம்மை அழிக்க முடியுமா? நமக்கு 70 ஆண்டுகால வரலாறு இருக்கிறது.ஏன் இப்போவும் சிலர் திமுக -வுக்கு நாங்கள்தான் மாற்று என பேசிக்கொண்டிருக்கிறார்கள். மாற்றம் மாற்றம் என்று சொன்னவர்கள் எல்லாம் மாறிப்போனாரக்ள், மறைந்து போனார்கள் . இதுதான் தமிழ்நாட்டோட politics. எடப்பாடி பழனிச்சாமி ஹானியிடம் ஆட்சி இருந்தபோது எதையுமே செய்யாமல், தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்க தெம்போ திராணியோ இல்லாமல் அடிமை சாசனம் எழுதிக்கொடுத்தார். ஆனால் பாஜக தன்னோடு இப்போதும் இருக்கிறது என வாய்துடுக்கோடு பேசிக்கொண்டிருக்கிறார். மேலும் எதிர்க்கட்சி தலைவர் என்கிற மாண்பே இல்லாமல் தரம்தாழ்ந்து என்னை ஒருமையில பேசிக்கொண்டிருக்கிறார். ரெய்டுகளிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள அதிமுக -வை அடமானம் வைத்துவிட்டார். திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாமல் அதிமுக -வில் இருக்கிறார் எடப்பாடி. தன்னுடைய கொள்கை அண்ணாயிசம் என அதிமுக சொன்னது, ஆனால் பழனிச்சாமி அமித்ஷாவிடமே சென்று சரண் அடைந்துவிட்டார். முழுசா நனைந்த பிறகு முக்காடு எதற்கு, என்று சொல்லுவார்கள். ஆனால் நேற்று டெல்லியில் கார் மாறி மாறி சென்ற பழனிச்சாமியை பார்த்து என்ன சொல்லுகிறார்கள் தெரியுமா? காலிலேயே விழுந்த பிறகு கர்ச்சீப் எதற்கு? என்று கேட்கிறார்கள்” என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியை கடுமையாக் விமர்சித்து பேசியிருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.