தமிழ்நாடு

திமுக அரசுக்கு எதிராக அவதூறு...அதிமுக பிரமுகா் கைது!

Tamil Selvi Selvakumar

கரூா் மாவட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய அதிமுக பிரமுகரை காவல்துறையினர் கைது செய்தனா். 

கரூர் மாவட்டம் மண்மங்கலம் அடுத்த பெரிய வடுகபட்டியை சேர்ந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை தலைவா் நவலடி கார்த்திக் என்பவா், சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த கிராம நிா்வாக அலுவலா் கொலை தொடா்பாக திமுக அரசுக்கு எதிராக இணையத்தில் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்த புகாாின் போில் நவலடி காா்த்திக்கை, கரூர் நகர காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதன் காரணமாக,  கரூர் நகர காவல் நிலையம் முன்பு ஏராளமான அதிமுகவினர் குவிந்துள்ளனர்.