தமிழ்நாடு

அதிமுக உறுப்பினர்கள் தான் வெளிநடப்பு செய்தனர்: சபாநாயகர் அப்பாவு விளக்கம்

அதிமுக உறுப்பினர்களை தான் வெளியேற்றவில்லை என்றும், அவர்களாக தான் வெளிநடப்பு செய்தனர் என்றும் சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

நேற்று கோடநாடு விவகாரம் தொடர்பாக அதிமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சபாநாயகர் அப்பாவு தான் அதிமுகவினரை வெளியேற்றியதாக கூறப்பட்ட நிலையில், இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு விளமளித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் அதிமுக உறுப்பினர்களை தான் வெளியேறவில்லை என்றும், அவர்களாக தான் வெளிநடப்பு செய்தனர் என்றும் கூறியுள்ளார். மேலும், என் அனுமதி பெறாமல், அதிமுக உறுப்பினர்கள் பதாகையை ஏந்தி கூச்சலிட்டனர். மக்கள் பிரச்சனையை பேசவேண்டிய அவையில் தனிப்பட்ட பிரச்சனையை பேச கூடாது என்று கூறியதாக சட்டப்பேரவையில் விளக்கமளித்துள்ளார்.