தமிழ்நாடு

நெடுஞ்சாலை மதுக்கடைகளை அகற்ற வேண்டும் - தலைமை செயலரிடம் அதிமுக மனு

Malaimurasu Seithigal TV


புதுச்சேரியில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகளை உச்ச நீதிமன்ற உத்தரப்படி அகற்ற வேண்டும் என அதிமுக சார்பில் தலைமை செயலரிடம் மனு அளிக்கப்பட்டது.

மதுபான விடுதிகளுக்கு அனுமதி அளிக்க கூடாது

புதுச்சேரியில் தேசிய, மாநில நெடுஞ்சாலை அருகே 500 மீட்டருக்கு அருகில் உள்ள மதுபான கடைகளை அவற்றை அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் சமீபகாலமாக ரெஸ்ட்ரோ பார் எனப்படும் மதுபான விடுதிகளுக்கு அரசு அனுமதி வழங்கி வருகிறது. புதுச்சேரியின் கலாச்சாரத்தை சீரழிக்கும் இந்த வகை மதுபான விடுதிகளுக்கு அனுமதி அளிக்க கூடாது என அதிமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவு

இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவு படி தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் தலைமைச்செயலரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன்,
நீதிமன்ற உத்தரவு படி மதுபான கடைகளை அகற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதிமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு தொடரப்படும் என்றார்.