stalin vs eps 
தமிழ்நாடு

வெற்றியை நெருங்கும் அதிமுக-பாஜக கூட்டணி!? ராமதாஸை அழைக்கும் எடப்பாடி..! தத்தளிக்கும் திமுக!

இந்த வாய்ப்பை லாவகமாக பயன்படுத்த நினைத்த NDA கூட்டணி, போராட்டங்களை ஒருங்கிணைத்து தங்களின் ஒற்றுமையை நிரூபித்துள்ளனர்...

Saleth stephi graph

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே இருக்கக்கூடிய நிலையில் திமுக தேர்தல் பணிகளை விரைந்து முன்னெடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கு மேல் இலக்கு வைத்து திமுக தேர்தல் பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடக்கூடாது என்பதற்காக திமுக தொடர்ந்து உழைத்து வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பிரிந்த அதிமுக பாஜக கூட்டணி தற்பொழுது மீண்டும் கூட்டணியை அமைத்து இருக்கிறது.  இந்த கூட்டணியை வெற்றி பெற வைக்க கூடாது என்பதற்காக தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை திமுக எடுத்து வருகிறது. 

அதிமுக - பாஜக கூட்டணி 

ஆரம்பத்தில்  அதிமுக - பாஜக கூட்டணி பெரிய அளவில் பிக் அப் ஆகவில்லை எனபேசப்பட்டது. ஆனால் சமீபத்தில் திருபுவனத்தில் காவல் துறையினரின் மோசமான தாக்குதலால் உயிரிழந்த அஜித் குமாரின் மரணம்  திமுக பெரும் சருக்கலாக அமைந்தது. இந்த வாய்ப்பை லாவகமாக பயன்படுத்த நினைத்த NDA கூட்டணி, போராட்டங்களை ஒருங்கிணைத்து தங்களின் ஒற்றுமையை நிரூபித்துள்ளனர்.

மேலும் எப்படியாவது திமுக வீழ்த்திவிட வேண்டும் என அமித்ஷா பல முயற்சிகளை எடுத்துள்ளார்.

திமுக -விற்கு பாதகமான விஜய் -ன் பேச்சு!

சமீபத்தில்  நடைபெற்ற தவெக கூட்டத்தில்  “மலிவான அரசியல் ஆதாயங்களுக்காக மக்களை மத ரீதியாக பிளவு படுத்தி, மக்களிடையே வேற்றுமையை விதைத்து அதில் குளிர் காய நினைக்கிறது பாஜக, அவர்களின் இந்த செயல் ஒரு போதும் தமிழகத்தில் வெற்றி பெறாது. பாஜகவுடன் இணைந்து போக இது அதிமுகவோ அல்லது திமுகவோ இல்லை இது தமிழக வெற்றிக் கழகம்” மேலும் “கொள்கை எதிரிகள் மற்றும் பிளவு வாத சக்திகள்” என்று திமுகவையும், பாஜகவையும் குறிப்பிட்ட விஜய், இந்த கட்சிகளுடன் மறைமுகமாகவோ இல்லை நேரடியாகவோ எந்த கூட்டணியும் தமிழக வெற்றிக் கழகம் என்றும் கூட்டணி வைக்காது. இது உறுதியான தீர்மானம் இல்லை இறுதியான தீர்மானம் என பேசியிருந்தார் இவரின் இந்த பேச்சு கூட்டணி சார்ந்து அதிமுக கொண்டோருந்த அனைத்து நம்பிக்கைகளையும் உடைத்து விட்டது. மேலும் பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து காட்டமாக பேசிய விஜய் -ன் பேச்சு மக்களிடையே கவனிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே திமுக -விற்கு பாதகமான சூழல் நிலவி வரும் நிலையில் தற்போதைய விஜயின் இந்த மூவ் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. 

அதிமுக -பாஜக ஏறுமுகமா!?

“அதிமுக -பாஜக கூட்டணி சிறப்பாக செயல்பட துவங்கியுள்ளது. ஆனால் அவை  மட்டுமே இவர்களுக்கான வெற்றியை தீர்மானிக்கப்போவதில்லை. உண்மையில் திமுக -வின் வாக்கு வங்கி கூட்டணி கட்சிகள் மூலமாக 20% வரை கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தின் பெரும்பான்மை தலித், சிறுபான்மையின, முஸ்லீம் வாக்கு வங்கிகள் திமுக -விற்கு கிடைக்கும் வாக்கு 20% ஆகும். இதில் பொதுமக்கள் வாக்கு 10% - இந்த 10% வாக்கு தான் மக்களிடையே திருப்தியாக உள்ளது. இந்த அதிருப்தி வாக்கு வங்கியும், விஜய் -கலைக்கும் ஓட்டுகளும் அதிமுக -பக்கம் திரும்பினால் அதிமுக கூட்டணி வெற்றி பெரும் வாய்ப்பு உள்ளது.இதற்கிடையில் பாஜக -உடன் இணைய அன்புமணி தரப்பு விருப்பம் காட்டுவதாக தெரிகிறது. ஆனால் அய்யா ராமதாஸை அழைத்து வாருங்கள் என அன்புமணியை அதிமுக-பாஜக தலைமை அனுப்பிவிட்டது.” என்கிறார் தமிழா தமிழா பாண்டியன்.

ஆனால் காலம் தான் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.