edappadi k. palaniswami 
தமிழ்நாடு

வெளியானது அதிமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்… மீண்டும் போட்டியிடும் 20 முன்னாள் அமைச்சர்கள்!

அதிமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலாக 23 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்...

Mahalakshmi Somasundaram

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தளுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் அதிமுக தனது கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு 27 தொகுதிகளையும், பாட்டாளி மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 18 தொகுதிகளையும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 11 தொகுதிகளையும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகளையும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 1 தொகுதியையும் ஒதுக்கியுள்ளது.

மேலும் புதிய நீதிக்கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு இதுவரை தொகுதிகள் ஒதுக்கப்படாத நிலையில் இரண்டு கட்சிகளுக்கும் தல 2 தொகுதிகள் என மொத்தம் 4 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை 62 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ள அதிமுக 163 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கூட்டணி கட்சிகளையும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்க போவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது அதிமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலாக 23 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் 20 முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்க பட்டுள்ளது. மேலும் மாநிலங்களவை எம். பி.யாக உள்ள சி.வி சண்முகம் மயிலம் தொகுதியில் போட்டியிட உள்ளார்.

  1. எடப்பாடி(86) - கே. பழனிசாமி (EPS)

  2. வேப்பனஹள்ளி(54) - கே.பி. முனுசாமி

  3. திண்டுக்கல்(132) - சி. ஸ்ரீனிவாசன்

  4. நத்தம்(131) - நத்தம் ஆர். விஸ்வநாதன்

  5. தொண்டாமுத்தூர்(119) - எஸ்.பி. வேலுமணி

  6. குமாரபாளையம்(97) - பி. தங்கமணி

  7. ராயபுரம் (17) - டி. ஜெயக்குமார்

  8. மயிலம்(71) - சி.வே. சண்முகம்

  9. மதுரை மேற்கு (194) - செல்லூர் கே. ராஜு

  10. பாலக்கோடு(57) - கே.பி. அன்பழகன்

  11. நன்னிலம்(169) - ஆர். காமராஜ்

  12. வேதாரண்யம்(165) - ஓ.எஸ். மணியன்

  13. விராலிமலை(179) - டாக்டர் சி. விஜயபாஸ்கர்

  14. கொளத்தூர்(218) - கே.பி. ராஜன்

  15. திருமங்கலம்(196) - ஆர்.பி. உதயகுமார்சிவகாசி

  16. சிவகாசி(205) - கே.டி. ராஜேந்திர பாலாஜி

  17. மாதவரம்(7) - பி. பெஞ்சமின்

  18. கலசப்பாக்கம்(65) - வி. கருணாநிதி

  19. திருப்பரங்குன்றம்(195) - வி.வி. ராஜன் செல்லப்பா

  20. பவானி(104) - கே.சி. கருப்பணன்

  21. ஜோலார்பேட்டை(49) - கே.சி. வீரமணி

  22. கரூர்(135) - எம்.ஆர். விஜயபாஸ்கர்

  23. அரியலூர் (149) - எஸ். ராஜேந்திரன்

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.