தமிழ்நாடு

“தலைமைச் செயலகமா.. தவெக அலுவலகமா?” - செய்தியாளர் சந்திப்பில் கிருஷ்ணமூர்த்தி கடும் விமர்சனம்.. குதிரை வேகத்தில் தவெக குதிரை பேரமா?

அவர்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

Mahalakshmi Somasundaram

சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்பு அதிமுகவில் நடந்த உட்கட்சி பூசல் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. எஸ். பி. வேலுமணி தரப்பில் கடந்த 13ம் தேதி அன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை கூறும் அரசு வாக்கெடுப்பில் அதிமுகவை சேர்ந்த 25 எம்.எல். ஏக்கள் தவெக- விற்கு ஆதரவு தெரிவித்தனர். எனவே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக - வை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்ற அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவை எதிர்த்து, நம்பிக்கை கூறும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த 25 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவை தலைவரிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் கொடுத்திருந்தார்.

அந்தக் கடிதம் பேரவை தலைவரின் பரிசீலணையில் உள்ள நிலையில் நேற்று மரக்கத்தகுமார், ஜெயக்குமார் சத்தியபாமா ஆகிய மூன்று எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஈபிஎஸ் தரப்பு அக்ரி கிருஷ்ணன் “அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாய்ந்து விடுமோ என்று மூன்று சட்ட உறுப்பினர்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ளார்கள். ஏற்கனவே அவர்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுகவின் கடிதம் ஆய்வில் இருக்கும் போது அவர்கள் பதவியை ராஜினாமா செய்வதை பேரவை தலைவர் ஏற்றுக் கொண்டது விதிகளுக்கும் முரணானது.

இதை ஏற்றுக் கொள்ள கூடாது என்று நாங்கள் அதிமுக சார்பில் எங்கள் கோரிக்கையை மனுவாக கொடுத்திருக்கிறோம். முதலமைச்சர் சட்டமன்றத்தில் பேசும் போது எங்கள் அரசு குதிரை வேகத்தில் செயல்படும் என்று சொன்னார். ஆனால் இந்த அரசு அதிமுகவினர் காலையில் பேரவை தலைவர் இடத்தில் ராஜினாமா கடிதம் கொடுத்த உடனே ஐந்து நிமிடத்தில் அவர்களுக்கு தங்கள் கட்சியில் உறுப்பினர் அடையாள அட்டையை மேல்தளத்தில் இருக்கும் அமைச்சர்கள் அவர்கள் அறையில் வழங்குகிறார்கள். இது தலைமைச் செயலகமா அல்லது தவெக கட்சி அலுவலகமா என்று தெரியவில்லை.. எங்கள் கோரிக்கையை பேரவை தலைவரிடம் கொடுத்திருக்கிறோம்.

இந்த அரசு குதிரை பேரத்தை குதிரை வேகத்தில் நடத்துவதாக பொதுமக்கள், அரசியல் கட்சியினர் எல்லோரும் சொல்கிறார்கள்.. தூய்மையான ஆட்சியை தருவதாக சொன்ன முதலமைச்சர் முறைத்தவறி பின்வாசல் வழியாக தனது ஆட்சியை நிலைநிறுத்த குதிரை பேரத்தை குதிரை வேகத்தில் நடத்துவது தான் எங்கள் குற்றச்சாட்டு.. சட்டமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேர் தாங்கள் செய்த தவறை மறந்து பொதுச் செயலாளரிடத்தில் மன்னிப்பு கோரி பேரு தலைவரிடம் கடிதம் கொடுத்துள்ளார்கள். எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்கள்.ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி கட்டப்பாட்டை மீறி குதிரை பேரத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை” என தமிழக வெற்றி கழகம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.