தமிழ்நாடு

மதுரை வேளாண் பல்கலைக்கழகம் எங்கே? உதயநிதி பாணியில் செங்கலை காண்பித்த அண்ணாமலை...!

Tamil Selvi Selvakumar

2026-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், மத்தியில் ஆளும் பாஜகவின் 9-ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி தொடங்கி இரண்டு வருடம் ஆகிவிட்ட நிலையில், 150 மாணவர்கள் மருத்துவமனைக்கு வந்துவிட்டாதாகவும், அவர்களுக்கான வேலை நடந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என உறுதியளித்தார்.

அதனை தொடர்ந்து பேசிய அவர், திமுக அதன் தேர்தல் அறிக்கையில் மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்ததாகவும், அதனை தற்போது வரை நிறைவேற்றவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து, உதயநிதி பாணியில் கையில் செங்கலை எடுத்து காண்பித்து மதுரையில் இருக்கிற வேளாண் பல்கலைக்கழகம் எனது கையில் உள்ளதாக அண்ணாமலை விமர்சித்தார்.