தமிழ்நாடு

ஆளுநருக்கு பாடம் எடுக்கும் அளவுக்கு அழகிரி பெரியவர் அல்ல...ஹெச்.ராஜா

ஆளுநருக்கு பாடம் எடுக்கும் அளவுக்கு அழகிரி பெரியவர் அல்ல என பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் மாமன்னர்கள் மருது சகோதரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறுகையில், 

இந்துமதம் தினிக்கப்படுவதாக சீமான் கூறியது குறித்த கேள்விக்கு, இந்து மதம் முதலில் பிறந்ததா அல்லது சீமான் பிறந்த பின் பிறந்ததா? என கேள்வி எழுப்பினார். 

மாநில தலைவர் அண்ணாமலைக்கு தனியார் நிறுவனம் அனுப்பிய நோட்டிஸ் குறித்த கேள்விக்கு, ஒட்டு மொத்த பா.ஜ.கவும் அவர் பின்னாலில் உள்ளது என்றும் நீதிமன்றத்தை எப்படி சந்திக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என பதிலளித்தார்.

ஆளுநர் மீதான காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரியின் விமர்சனம் குறித்த கேள்விக்கு மாநில அரசிற்கான அதிகாரம், மத்திய அரசிற்கான அதிகாரம் இரண்டுக்கும் பொதுவான அதிகாரம் என்ன என்பது குறித்து அறிந்தவர் ஆளுநர் அவருக்கு பாடம் எடுக்கும் அளவிற்கு அழகிரி பெரியவர் அல்ல என்றும் பதிலளித்தார்.