தமிழ்நாடு

மதுரை சிறையில் ரூ.100 கோடி அளவுக்கு ஊழல்? புதிய வழக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை மத்திய சிறையில் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து முழுமையான விவரங்களுடன் புதிய வழக்காக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறித்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

மதுரை மத்திய சிறையில் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து முழுமையான விவரங்களுடன் புதிய வழக்காக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறித்தியுள்ளது.

மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த மருத்துவ பொருட்கள், எழுது பொருட்கள், உறைகள் ஆகியவற்றை அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்களுக்கு அனுப்பியதாக போலி கணக்கு தயாரித்து ஊழல் செய்துள்ளதாக குற்றம்சாட்டி மனு தாக்கல் செய்யப்பட்டது.

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் இதற்கான ஆதாரங்கள் பெறப்பட்டதாகவும், இந்த முறைகேட்டில் அப்போதைய சிறை கண்காணிப்பாளர், டிஐஜி-களுக்கு தொடர்பு உள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆதாரங்கள் இல்லாமல், பொது வழக்காக தொடர முடியாது என தெரிவித்து, குற்றச்சாட்டுகள் தொடர்பான முழுமையான விவரங்களுடன் புதிய வழக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தியது.