தமிழ்நாடு

வடமாநிலத்தவர்கள் பிரச்சனைக்கு நான் காரணமா? கே.எஸ்.அழகிரிக்கு சீமான் கடும் கண்டனம்!

Tamil Selvi Selvakumar

வடமாநிலத்தவர்கள் பிரச்சனைக்கு நான் காரணம் என கூறுவதா என கே.எஸ்.அழகிரிக்கு  சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் கடந்த ஏழு நாட்களாக குடி சான்றிதழ் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து குறவர் சமூக மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் முட்டி போட்டு போராட்டம், தர்ணா போராட்டம், பட்டினி போராட்டம், ஒப்பாரி போராட்டம் என பலகட்ட போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த மக்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டத்தில் ஈடுப்பட்டு கண்டன உரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், வடமாநிலத்தவர்கள் பிரச்சனைக்கு  நான்  காரணம் என கூறிய கே.எஸ்.அழகிரிக்கு  கண்டனம் தெரிவித்தார். மற்ற மாநிலங்களில் தமிழர்கள் பாதுகாப்பாக வாழ்கின்றனரா என ஓர் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் குறவர்  சமூக மக்கள் போராட்டம் குறித்து பேசிய சீமான்,  இவ்வளவு காலம் குடி சான்றிதழ் கொடுக்காமல் அரசு வஞ்சித்து  வருவதாக குற்றம்சாட்டியவர், குழந்தைகள் வீதியில் ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர் என்றும், அரசு இதனை கவனத்தில் எடுத்து உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.