தமிழ்நாடு

எழுத்தாளா் ராஜதுரைக்கு அம்பேத்கா் விருது..!

Malaimurasu Seithigal TV

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மக்களுக்காக தொண்டாற்றி வரும் எழுத்தாளா் எஸ்.வி.ராஜதுரைக்கு 2022-ம் ஆண்டிற்கான அண்ணல் அம்பேத்கா் விருது வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழின் முன்னணி எழுத்தாளா்களில் ஒருவரான எஸ்.வி.ராஜதுரை மாா்க்சியம், அந்நியமாதல், இலங்கை தமிழா் சிக்கல், இந்து இந்திய புரட்சி தேசியம் உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளாா். மேலும் தமிழ்நாடு அரசியல் பற்றிய நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளாா்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மக்களுக்கு தொண்டாற்றியதற்காக இவருக்கு அரசு சாா்பில் 2022-ம் ஆண்டுக்கான அம்பேத்கா் விருது வழங்கபட உள்ளது. இவ்விருதினை சென்னை வள்ளுவா் கோட்டத்தில் நாளை  நடைபெற உள்ள திருவள்ளுவா் தின நிகழ்ச்சியில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளாா்.