PMK 
தமிழ்நாடு

“அவர் அரசியலுக்கு தகுதியற்றவர்” -பாமக -விலிருந்து அன்புமணி நீக்கம்…! ராமதாஸ் அதிரடி!

அன்புமணி தற்போது பாமக -வில் செயல் தலைவராக மட்டுமே நீடித்து வந்தார். இந்த நிலையில் ...

மாலை முரசு செய்தி குழு

பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையில் மோதல் நிலவி வந்தது, தமிழ்நாடே அறிந்த ஒன்று.. இந்த சூழலில் அன்புமணி பாமக -விலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரின் செயல்தலைவர் பதவி மட்டுமல்லாது, அடிப்படை உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

அன்புமணி தற்போது பாமக -வில் செயல் தலைவராக மட்டுமே நீடித்து வந்தார். இந்த நிலையில் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள அன்புமணி தரப்பில், பாட்டாளி மக்கள் கட்சிக்கு உரிமை கோரியோ, சின்னத்துக்கு உரிமை கோரியோ வழக்குகள் தாக்கல் செய்தால், தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது எனக் கோரி, ராமதாசால் நியமிக்கப்பட்டுள்ள பொதுச் செயலாளர் முரளி சங்கர் சார்பில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்களில் நேற்று கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போதே அன்புமணிக்கு ஆபத்து வரும் என அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுத்தன.

இந்த சூழலில்தான் தற்போது “அன்புமணி கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டுள்ளார். அவரின் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை. எனவே அன்புமணி பாமக -வின் அடிப்படை உறுப்பினர் பதிவியிலிருந்து நீக்கப்படுகிறார். செயல் தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளும் அவரிடமிருந்து பறிக்கப்படுகிறது. அவர் அரசியலுக்கு தகுதியானவர் இல்லை. பாமக -வை சேர்ந்த யாரும் அவருடன் தொடர்பில் இருக்கக்கூடாது” என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.