தமிழ்நாடு

மேலும் ஒரு அவதூறு வழக்கு; ராகுல் காந்திக்கு சம்மன்!

Malaimurasu Seithigal TV

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகுமாறு ராகுல்காந்தி மற்றும் சித்தராமையாவுக்கு எம்பி-எம்எல்ஏக்கள் சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

கர்நாடகா சட்டமன்ற பிரச்சாரத்தின் போது அவதூறாக விளம்பரம் செய்ததாக பாஜக தொடர்ந்த வழக்கில், முதலமைச்சர் சித்தராமையா, ராகுல்காந்தி உள்ளிட்டோருக்கு எம்பி-எம்எல்ஏக்கள் சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 

நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இதற்கான பிரச்சாரத்தின் போத பாஜக 40 சதவீத ஊழலில் ஈடுபட்டதாகவும், ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கொள்ளையடித்ததாகவும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வெளியிடப்பட்ட விளம்பரங்களில் செய்தி தெரிவிக்க்பட்டிருந்தது. இந்நிலையில் இச்செய்தி  உண்மைக்கு புறம்பானது எனஎனவும் பாஜக காங்கிரஸ் கட்சி மீது அவதூறு வழக்கு தொடர்ந்து. இந்நிலையில் இதுதொடர்பாக வரும் 27ம் தேதிக்குள் விளக்கமளிக்க கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், ராகுல்காந்தி மற்றும் கர்நாடக காங்கிரஸ் கமிட்டிக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.