தமிழ்நாடு

திமுகவினர் சொத்து குவிப்பு; "வழக்கு வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்" அண்ணாமலை கோரிக்கை!

Malaimurasu Seithigal TV

தமிழக அமைச்சர்கள் மீது உள்ள வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை வேறு மாநில நீதிமன்ற  மாற்ற வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

சென்னை  விமான நிலையத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தங்களுடைய பதவியை தவறாக பயன்படுத்துகின்றனர். கீழமை நீதிமன்றம் வேறு நபர்கள் சொல்லி இருக்கும் அடிப்படையில் உத்தரவு பிறப்பித்து இருக்கின்றனர். இதன் வழியாக நீதிமன்றத்திலும் திமுக தலையீடு இருக்கிறது என்பது உறுதியாகி உள்ளது. 

இந்த வழக்குகளை இப்போது உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் நிலையில், வேறு மாநிலத்திற்கு வழக்கை மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது. அதனால் தான் பிஜிஆர் நிறுவனம் மீது இருக்கும் ஊழல் தொடர்பாக தொடர்ந்து பேசி வருகிறேன். தமிழகத்தில் இருக்கும் ஊழல் அரசு போல் வேறு எங்கும் இல்லை. தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புதுறையை கலைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்பாக அமலாக்கதுறை மனு செய்து இருக்கிறது. அடுத்து அமைச்சர் கீதா ஜீவன் மீது வழக்கு வரும் என தெரிவித்தார். இவற்றை  செய்திகளின் அடிப்படையில் தான் பேசுகிறேன் எனவும் தெரிவித்தார்.