தமிழ்நாடு

அண்ணாமலை இன்று திடீர் டெல்லி பயணம்...!

Malaimurasu Seithigal TV

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று மாலை திடீர் பயணமாக  டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

’என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் கடந்த மாதம் 28 ம் தேதி ராமநாதபுரத்தில் இருந்து அண்ணாமலை நடைபயண யாத்திரையை  தொடங்கினார்.

இந்நிலையில் நடைபயணமானது புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக கடந்து தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது.

மதுரையில் இன்று  பாஜக சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொள்ள இருந்தது.

இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.,நட்டா அழைப்பின் பேரில் டில்லிக்கு திடீரென பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.