தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை - வெளியான திடுக்கிடும் தகவல்கள்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Jeeva Bharathi

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த கோட்டூர்புரம் போலீசார், இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் அவர் கோட்டூர்புரம் சாலையின் நடைபாதையில் பிரியாணி கடை நடத்தி வருவது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் எப்.ஐ.ஆரில் மாணவி கூறிய புகார்கள் குறித்த தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி தனது ஆண் நண்பருடன் தனிமையில் இருந்ததை வீடியோவாக பதிவு செய்த ஞானசேகரன், பேராசிரியர்களிடம் வீடியோவை காண்பித்துவிடுவேன் எனக்கூறி மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், செல்போனில் இருந்த தனது தந்தையின் எண்ணை எடுத்துக்கொண்டு அவருக்கு வீடியோ அனுப்பிடுவேன் எனக்கூறி மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், விவரங்களுடன் ஆன்லைனில் எப்.ஐ.ஆர் பதிவேற்றம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதையடுத்து, கைதான ஞானசேகரன், செல்போன் எண்ணை வைத்து போலீசில் சிக்காமல் இருப்பதற்காக, Flight mood-ல் வைத்திருந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞானசேகரன் செல்போனில், பாலியல் வன்கொடுமை செய்த மாணவி குறித்து வீடியோ மட்டுமல்லாமல், சில பெண்களை தவறான முறையில் எடுத்து வைத்துள்ள வீடியோக்களும் சிக்கியுள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஞானசேகரன் செல்போனை சைபர் கிரைம் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்து ஆய்வு செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.