தமிழ்நாடு

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு குடியரசுத்தலைவர் பதக்கங்கள் அறிவிப்பு...!

Tamil Selvi Selvakumar

குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தலைசிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல் பதக்கம் அறிவிப்பு :

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று, சிறப்பாக செயல்பட்ட மாநில காவல்துறை அதிகாரிகள், மத்திய ஆயுதப்படை வீரர்கள், ரயில்வே காவல் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு குடியரசுத்தலைவர் பதக்கம் வழங்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் நாடு முழுவதும் 74வது குடிரயசு தினவிழா நாளை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.  இதனையொட்டி சிறந்த சேவைக்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் காவல் பதக்கங்கள் நாடு முழுவதும் 901 காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னை ஐஜி அதிகாரி தேன்மொழி, செங்கல்பட்டு ஏஎஸ்பி பொன்ராமு, அரியலூர் ஏஎஸ்பி ரவிசேகர் ஆகியோருக்கு குடியரசு தலைவரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 காவலர்களுக்கு சிறந்த சேவைக்கான பதக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.