தமிழ்நாடு

தடுப்பூசி கையிருப்பில் இல்லை... டெல்லி செல்லும் மற்றொரு அமைச்சர்!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கையிருப்பில் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கையிருப்பில் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் தலைநகர் சென்னையில் இரண்டாவது நாளாக தடுப்பூசி மையம் செயல்படவில்லை. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கையிருப்பில் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டுக்கு கூடுதலாக தடுப்பூசிகள் பெறுவதற்காக வரும் வியாழன் அன்று டெல்லி சென்று ஒன்றிய அமைச்சரை சந்தித்து பேச உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் 8ஆம் தேதி டெல்லி பயணம் செய்ய உள்ளனர்.

தமிழகத்திற்கு போதிய தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கும் படி கோரிக்கை வைப்பதற்காக டெல்லி பயணம் மேற்கொள்கின்றனர்.