தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியை சந்தித்து ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர்கள்  

அதிமுக முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி சொந்தமான பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்திய நிலையில் கே.சி.வீரமணியுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சந்தித்து பேசினர்.

Malaimurasu Seithigal TV

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில்  5 கிலோ தங்க நகைகள், ரோல்ஸ் ராய்ஸ் கார் உட்பட 9 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் கணக்கில் வராத 1.8 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர் நோட்டு கைப்பற்றப்பட்டுள்ளன.வீரமணிக்கு சொந்தமான 35 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் முன்னாள் அதிமுக அமைச்சர்களின் மீது திமுக காழ்புணர்ச்சி காரணமாக சோதனை நடத்தி அச்சுறுத்துவதாக அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டது.இந்த நிலையில் தனது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியதற்கு திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையே காரணம்; இதை சட்டரீதியாக சந்திப்பேன் என கே.சி. வீரமணி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜோலார்பேட்டையில் லஞ்ச ஒழிப்புப் சோதனையில் சிக்கிய கே.சி. வீரமணி உடன் முன்னாள் அமைச்சர்கள் சந்தித்துள்ளனர்.  முன்னாள் அதிமுக அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி. சண்முகம் , கருப்பண்ணன் ஆகியோர் கே.சி .வீரமணியுடன் ஆலோசனை நடத்தினர்.