தமிழ்நாடு

மாநில பறவை ஆணையத்திற்கு தலைவர், உறுப்பினர்கள் நியமனம் - தமிழ்நாடு அரசு உத்தரவு!

Tamil Selvi Selvakumar

மாநில பறவை ஆணையத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு மாநில பறவை ஆணையத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைவராகவும், முதன்மை வன தலைமை பாதுகாவலர் உறுப்பினர் செயலாளராகவும், வருவாய் துறை செயலாளர் அல்லது ஆணையர், சுற்றுலாத்துறை இயக்குனர் உள்ளிட்ட 8 பேர் உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த குழு அனைத்துப் பறவைகளுக்கும் ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தைத் தயாரிக்கவும், பறவைகள் கூடு கட்டுவதற்கான நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் சரணாலயங்கள் மற்றும் மற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.