தமிழ்நாடு

தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கு உறுப்பினர்கள் நியமனம்...!

Tamil Selvi Selvakumar

தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கு உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 


தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கு உறுப்பினர்களை நியமித்து உத்தரவிட்ட தமிழ்நாடு அரசு, நாடாளுமன்ற உறுப்பினர் பிரதிநிதியாக, மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லாவும், சட்டப் பேரவை உறுப்பினர் பிரதிநிதிகளாக ஜெ.எம்.எச்.அசன் மெளலானா, பி.அப்துல் சமது ஆகியோரும், உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகளாக சென்னையைச் சேர்ந்த பாத்திமா அகமது, தாவூத், ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது ஜஹாங்கீர் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவர் எம்.அப்துல் ரகுமான்  ஹஜ் கமிட்டியின் செயலாளர் மற்றும் நிர்வாக அலுவலர் முகமது நசிமுதீன் ஆகியோரும்  இடம் பெற்றிருப்பார்கள் என்று அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.