விஜய் படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, கோவில் அறங்காவலர் நியமன உறுப்பினர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘பிகில்’, ‘கோட்’ ஆகிய படங்களின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி. தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான AGS Entertainment நிறுவனத்தின் உரிமையாளர் கல்பாத்தி எஸ். அகோரத்தின் மகள் ஆவார்.
‘லவ் டுடே’, ‘டிராகன்’ போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ள இவருக்கு, அறங்காவலர் நியமனக் குழுவில் இடம் அளிக்கப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
முன்னதாக, முதலமைச்சர் விஜய் தனது ஜோதிடருக்கு அரசு பதவி வழங்கியது சர்ச்சையான நிலையில், அந்த நியமனம் பின்னர் வாபஸ் பெறப்பட்டது.
தொடர்ந்து, தனது ‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணாவுக்கு, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவியை வழங்கினார் முதல்வர். இதற்கு பல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.
தற்போது மற்றுமொரு தயாரிப்பாளர் அறநிலையத்துறையில் பதவி பெற்றுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.