தமிழ்நாடு

உடல் நலக்குறைாவால் பாதிக்கப்பட்ட ஆற்காடு வீராசாமி - நேரில் சந்தித்து நலம் விசாரத்தார் வெங்கையா நாயுடு

முன்னாள் திமுக  அமைச்சர் ஆற்காடு வீராசாமியை நேரில் சந்தித்து   குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு நலம் விசாரித்தார்.

Malaimurasu Seithigal TV

திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி  உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இது  பற்றி விசாரிக்க குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இன்று அண்ணா நகர் இல்லத்திற்கு வருகை தந்து ஆற்காடு வீ்ராசாமியை சந்தித்தார்.

பின்னர் தந்தையின் உடல் நலம் குறித்து  கலாநிதி எம்பியிடம் கேட்டறிந்தார்.சுமார் 15 நிமிடம் சந்திப்பிற்கு பின் வெங்கையா நாயுடு புறப்பட்டுச் சென்றார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கலாநிதி வீராசாமி, குடியரசு துணை தலைவர் நட்பின் அடிப்படையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாக தெரிவித்தார்.