நட்டி நடராஜன் நடிப்பில் உருவாகும் 'TN 2026 – தங்க நட்சத்திரம்' திரைப்படத்தின் டீசர் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. டீசர் வீடியோ வெளியான சில மணி நேரத்திலேயே சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உமாபதி ராமையா இயக்கியுள்ள இந்தப் படத்தில், அரசியல் மற்றும் சினிமா ஆகிய இரண்டு கூறுகளும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டீசர், படத்தின் கதைக்களத்தை ஒரு முன்னோட்டமாக காட்டுவதுடன், முக்கிய கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி, சில அருமையான ஸ்பெஷல் கதாபாத்திரங்களையும், ஸ்ட்ராங்கான வசனங்களையும் கொண்டுள்ளது. ஆச்சரியப்படும் விதமாக, வெளியான சில மணி நேரங்களிலேயே, இந்த டீசர் எல்லா சமூக வலைதளங்களில் டிரெண்டிங் தலைப்பாக மாறியதுடன், படம் மற்றும் அதன் கதைக்களம் குறித்து பல கேள்விகளையும் எதிர்பார்ப்புகளையும் உருவாக்க்கியுள்ளது. மேலும், டீசரில் காட்டப்பட்டுள்ள அரசியல் மற்றும் சினிமா கலந்த வாசனைகள் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. ரசிகர்களிடமும், அரசியல் விமர்சகர்களிடமும் படம் குறித்த ஆர்வத்தை தூண்டியுள்ளது.
திரைப்பட டீசர், நட்டியை ஒரு பிரபலமான தமிழ் சினிமா நட்சத்திரமான “கோல்டன் ஸ்டார்” ஆக அறிமுகப்படுத்துகிறது. அவர் தனது புகழைப் பயன்படுத்தி அரசியலில் களமிறங்க முடிவெடுத்துள்ளார். இந்த முடிவை பலர் ஆதரிக்கவில்லை. மாநிலத்தை வழிநடத்தும் நடிகரின் திறனையும், யதார்த்தத்தை எதிர்கொள்ளும் திறனையும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் கேள்விக்குள்ளாக்குகின்றது போன்ற காட்சிகளும், வாசனைகளும் இடம் பெற்றுள்ளது. படத்தின் கதைக்களம் ஏற்கனவே அரசியல் களத்தில் கதாநாயகன் சந்திக்கும் சிரமங்கள், விமர்சனங்கள்மற்றும் அதை எதிர்கொள்வது போன்ற நகர்வாக இருக்கும் என தெரிகிறது.
இந்த படத்தில் நட்டி நடராஜ், தம்பி ராமையா, குணசித்திர நடிகர் எம் எஸ் பாஸ்கர், இளவரசு மற்றும் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். திரைப்படத்தின் இயக்குனர் உமாபதி ராமையா, தம்பி ராமையாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. உமாபதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பங்கு பெற்று மக்களிடையே வரவேற்பை பெற்றிந்தார். பின்பு நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா-வை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். அவர் நடித்த படங்கள் அவருக்கு வரவேற்பை பெற்று தராத நிலையில் சர்வைவர் கேம் ஷோ மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமாக மாறி உள்ளார். தற்போது அவரின் இயக்கத்தில் வெளியாக போகும் TN 2026 தங்க நட்சத்திரம் திரைப்படம் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு இது இவர் இயக்கும் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
டீசரில் இடம்பெற்றுள்ள வாசனைகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது. “ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி இருக்கிறார்” என தொடகும் டீசர், “ஏ சினிமாக்கார பயலே, இது தமிழ் நாடுடா வாழ ஆசைப்படு தப்பு இல்ல, ஆள நினைக்குறியே தப்பில்ல” போன்ற வசனகங்கள் பெரும் பரபரப்பை ஏற்படும் என தெரிகிறது. அதையடுத்து “கூத்தாட வந்தவனையெல்லாம் தலைவனாக்கி தலைமேல் தூக்கி வச்சி கொண்டாடுரீங்க” மற்றும் “ஏன் அரசியல் பேசக்கூடாது, அரசியல் பேசுனா என்ன? என் நடிகர்கள் அரசியல் பேசக்கூடாதா?” போன்ற கேள்விகள் அரசியல் களத்திலும் சினிமா துறையிலும் பல கேள்விகளை எழுப்பும் என தெரிகிறது.
தற்போது தமிழகம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான களமாக மாறியுள்ள நிலையில் இது போன்ற வசனங்களும் காட்சிகளும் மக்களிடையே பேசுபொருளாக மாறியதோடு, சமூக வலைத்தளத்திலும் ட்ரெண்ட் ஆகியுள்ளது. எம்ஜிஆர் முதல் தற்போது விஜய் வரை சினிமா துறையில் இருந்து அரசியல் களத்திற்கு வந்தவர்கள் அதிகம். அதில் வரவேற்பு பெற்றவர்களும் உள்ளார்கள், தோல்வி பெற்று வெளியேறியவர்களும் உள்ளார்கள். அதேபோல் விமர்சனங்களை கையாள்வது மற்றும் அதை எதிர்கொள்வது போன்றவை முக்கிய பங்கு வகிக்கிறது. அதையெல்லாம் உள்ளடக்கியதாக இத்திரைப்படம் இருக்கும் என தெரிகிறது. மேலும் இதற்கு முன் தமிழ் சினிமாவில் ஏராளமான அரசியல் பேசும் படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால் தற்போது இருக்கும் அரசியல் சூழலில் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.