Arlekar Tamil Nadu Governor 
தமிழ்நாடு

தமிழக ஆளுநர் பதவியில் அதிரடி மாற்றம்! இனி முழுநேர ஆளுநர் இவர்தான்.. கேரளாவுக்கு யார்? குடியரசுத் தலைவர் வெளியிட்ட உத்தரவு

இவர் ஆர்.என். ரவி மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டபிறகு, மார்ச் 12, 2026 அன்று தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பொறுப்பேற்றார்.

Vinvizhi Leninton

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமித்து குடியரசு தலைவர் உத்தரவை பிறப்பித்துள்ளார். தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்த இவர், தற்போது முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கேரளத்தின் ஆளுநராகவும், தமிழகத்திற்கு பொறுப்பு ஆளுநராகவும் செயல்பட்டு வந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தற்போது தமிழகத்திற்கு முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டதோடு, கேரளத்திற்கு புதிதாக ஓம் பிரகாஷ் மதூர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஒடிசா ஆளுநராக பிரஜ் மோகன் ராம் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அர்லேகர் கேரளத்தின் 23-வது ஆளுநராக இருந்துள்ளார்.

அர்லேகர், ஆர்.என். ரவி மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டபிறகு, மார்ச் 12, 2026 அன்று தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பொறுப்பேற்றார். இதற்கு முன்பு இவர், பிஹார், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் முன்னாள் ஆளுநராக செயல்பட்டு வந்துள்ளார். மேலும், கோவா அரசாங்கத்தில் அமைச்சராகவும், கோவா சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகராகவும், பாஜக தலைவர்களில் ஒருவராகவும் அர்லேகர் இருந்துள்ளார்.

தமிழகம் மட்டுமின்றி ஒடிசா, கர்நாடகா, உத்தரகாண்ட், சிக்கிம் மாநிலங்களுக்கும் ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். உத்தரகாண்ட் ஆளுநராக தல் சிங் பிஷன், சிக்கிம் ஆளுநராக துஷ்யந்த் கௌதம், கர்நாடகாவின் ஆளுநராக சுதா யாதவ் , ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்