தமிழ்நாடு

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து.... பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு ...!!

நீலகிரி மாவட்டம் காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டார் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

Malaimurasu Seithigal TV

நீலகிரி மாவட்டம் காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டார் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் 14 பேர் பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் மிக உயர்பொறுப்பிலுள்ள ராணுவ அதிகாரிகள் பயணித்துள்ளன்ர்.

விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டரில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் பயணித்ததாகவும் தகவல் வெளியாகியியுள்ளது.

ஹெலிகாப்டர் விழுந்த இடத்தில் மீட்பு பணியில் ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 7 பேர்களின் உடல்கள் மீட்கபட்ட நிலையில், முப்படைகளின் தலைமைத்தளபதி பிபின் ராவத் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை என சொல்லப்படுகிறது.

மீட்கப்பட்ட ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவிற்கு உள்ளதாக கூறப்படுகிறது.