தமிழ்நாடு

தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழத்தில் 16, 140 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு...அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

தீபாவளி பண்டிகையை ஒட்டி, தமிழகத்தில் 16 ஆயிரத்து 140 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தமிழக போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறுகையில், தமிழகத்தில் வருகின்ற நவம்பர் மாதம் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தமிழகத்தில் 16 ஆயிரத்து 140 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என்றும் தேவைப்பட்டால் 17 ஆயிரத்து 700 பேருந்துகள் இயக்குவதற்கும் தயார் நிலையில் உள்ளோம் என்றார்.

தமிழகத்தில் போக்குவரத்து துறையில் 6 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது இதில் ஓட்டுநர் நடத்துனர் உள்ளிட்ட அனைத்து பதவிகள் உள்ளன என்றும் விரைவில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என கூறினார்.

மேலும் சென்னை, மதுரை, கோவை, உள்ளிட்ட மாவட்டங்களில் எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.