தமிழ்நாடு

"ஆயிரம் மகளிர் உரிமைத்தொகை: புதிதாக விண்ணப்பிக்க விரைவில் அறிவிப்பு" - உதயநிதி ஸ்டாலின்!

Malaimurasu Seithigal TV

மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பிக்காத பயனாளிகளும் புதிதாக விண்ணப்பிக்க அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். 

சட்டப்பேரவையில்  "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்" தொடர்பாக எம்எல்ஏக்கள் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானம் மீது பதிலுரை அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமை திட்டத்திலிருந்து எந்த ஒரு தகுதியான பயனாளியையும் விட்டுவிடக்கூடாது என்று அரசு மிகவும் கவனமாக செயல்பட்டு வருவதாக உறுதியளித்தார். 

மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பிக்காத பயனாளிகளும் புதிதாக விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.