சூலூர் கலங்கல் பகுதியைச் சேர்ந்த அருந்ததியர் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு கொடுத்த பட்டா பூமியை கணினி வழியாக முறைகேடு செய்து வேறு பிரிவினர் அபகரித்துக்கொண்டதாக கூறி சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சுமார் 50 க்கும் மேற்பட்டோர் இன்று சூலூர் பெருமாள்கோவிலில் இருந்து கருப்புக் கொடியுடன் ஊர்வலமாக வந்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அங்கு தயாராக இருந்த சூலூர் போலீசார் 22 பெண்கள் உட்பட 50 பேரைக் கைது செய்தனர். திடீர் முற்றுகைப் போராட்டத்தால் வட்டாட்சியர் இயர் அலுவலக பகுதியில்சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.