தமிழ்நாடு

முதன்முறையாக தமிழகத்தில் குதித்த அசாதுதீன் ஓவைசி கட்சி!!

தமிழகத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது அசாதுதீன் ஓவைசி கட்சி.

Malaimurasu Seithigal TV

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து வரும் நிலையில், திமுக 90 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல், அதிமுக வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றி எதிர்கட்சிகளை அதிர வைத்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் தனது முதல் வெற்றியை பதித்த  அசாதுதீன் ஓவைசியின் மஜ்லீஸ் கட்சி. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட 19 வது வார்டில்  அசாதுதீன் ஓவைசி காதசி சார்பாக பட்டம் சின்னத்தில் போட்டியிட்ட நபிலா வக்கீல் அகமது வெற்றி பெற்றுளார்.