தமிழ்நாடு

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி தலைமை ஆசிரியர் ...போலீசார் விசாரணை

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த  நடுக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, உதவி தலைமை ஆசிரியர் மீது புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நடுக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவியிடம், அந்த பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதனைதொடர்ந்து தனக்கு நடந்தவற்றை பள்ளி மாணவி பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியை அழைத்துக்கொண்டு பள்ளியிலிருந்த தலைமை ஆசிரியரிடம், சம்பந்தபட்ட உதவி ஆசிரியரான குறித்து புகார் அளித்தனர்.

அதுமட்டுமல்லாது உதவி ஆசிரியரான பழனிவேலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது. தகவலறிந்து வந்த போலீசார், ஆசிரியரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.