சென்னை பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் நாகராஜன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட நாகராஜனை ஜுன் 11ஆம் தேதி வரை காவலில் வைக்க போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே நாகராஜனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் அனுமதி கோரியpருந்த நிலையில் நீதிபதி முகமது பாரூக், 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.