தமிழ்நாடு

3 வயது பெண் குழந்தை கடத்த முயற்சி... தப்பியோட நினைத்த வடமாநில இளைஞருக்கு தர்ம அடி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில 3 வயது பெண் குழந்தையை கடத்த முயன்ற வடமாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Malaimurasu Seithigal TV

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சேடன்குட்டைத் தெருவில் வசித்து வருபவர் ஆனந்த், இவரது மனைவி சூர்யா. இவர்களுக்கு 3 வயதில் அஸ்வினி என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் இன்று குழந்தை அஸ்வவினி வீட்டுற்கு அருகாமையில் விளையாடி கொண்டிததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு அடையாளம் தெரியாத வடமாநில இளைஞர் ஒருவர் குழந்தையை திடீரென்று தூக்கிக் கொண்டு ஓட முயன்றுள்ளார்.

இதைக்கண்ட பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து திண்டிவனம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் வழக்குபதிவு செய்து வடமாநில இளைஞரிடம் விசாரணை மேற்க்கொண்டனர். விசாரணையில் அவர் நாக்பூர் மாநிலத்தை சேர்ந்த ராகுல் என்பதும், அவர் அந்த பகுதியில் தொடர்ந்து சுற்றித்திரிவதும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.