தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சித்தையகவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கூழித்தொழிலாளியான பால்பாண்டி இவருடைய 3 வயது மகன் வேனு பிரசாத்தை அவருடைய தாத்தா பழனிச்சாமி காலையில் ஆடுகளுக்கு இரை பறிப்பதற்காக அழைத்து சென்ற நிலையில் தோட்டத்தில் விளையாட விட்டுவிட்டு குழந்தையின் தாத்தா ஆடுகளுக்கு இரை சேகரிக்க சென்றார். விளையாடி கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராத விதமாக தோட்டத்தில் இருந்த பண்ணைக்குட்டையில் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்து வந்துள்ளார்.
பின்னர் சிறுவனை தேடி வந்த அவனின் தாத்தா அருகே இருந்தவர்கள் உதவியுடன் பண்ணை குட்டையில் கிடந்த சிறுவனை தூக்கிக்கொண்டு ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது சிறுவனை சோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.சிறுவனின்
உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள ஆண்டிப்பட்டி காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுவன் விவசாய தோட்டத்து பண்ணை குட்டையில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்