தமிழ்நாடு

ரூ.120 கோடி கடனை செலுத்தாத பிரபல சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம்...கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்!!

சென்னை தி நகர் ரங்கநாதன் தெரு மற்றும் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள ப்ரைம் சரவணா ஸ்டோர் கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.  

Tamil Selvi Selvakumar

சென்னை தியாகராய நகரில் இயங்கி வந்த ப்ரைம் சரவணா ஸ்டோர்ஸ் இந்தியன் வங்கிக்கு ரூபாய் 120 கோடி கடன் செலுத்த வேண்டி இருந்ததாக தெரிகிறது. இதை செலுத்தாத காரணத்தினால் வங்கி சார்பில் சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

அந்த வழக்கில் சரவணா ஸ்டோர்ஸ்க்கு சொந்தமாக உள்ள நகைக்கடை மற்றும் துணிக்கடை ஆகியவற்றை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக நீதிமன்றம் நியமித்திருந்த ஆணையர் ஒருவர் சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அளித்திருந்தும் அதற்கு பதில் ஏதும் பெறப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ்க்கு சொந்தமான இரண்டு கட்டிடங்களை் வங்கி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் பூட்டி சீல்வைக்கப்பட்டன.