திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள குன்னத்தூர், கோபி சாலையில் புதிதாக கட்டப்பட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் ரூ.3.75 கோடி மதிப்பில் ஒழுங்கு முறை விற்பனைக் கூட கட்டிடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தலைமை செயலகத்தில் இருந்து கானொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித்குமார் கலந்து கொண்டனர். இதை தொடர்த்து செய்திதுறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றிவைத்து, அப்பகுதி விவசாயிகளுக்கு வேளாண் சார்ந்த பொருட்களை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த விவாசாயிகள், குன்னத்தூர் நகர மற்றும் ஒன்றிய திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.