தமிழ்நாடு

சென்னை பாரிமுனையில் குவியும் மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல்!

Malaimurasu Seithigal TV

ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு பூஜை பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்ததால், சென்னை பாரிமுனையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

வருகின்ற 23 மற்றும் 24-ம் தேதிகளில், ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பூஜை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, சென்னை பாரிமுனையில், சிறப்பு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை வார இறுதி என்பதால், இன்றே சில நிறுவனங்களில் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. 

இதற்காக, பூ, மாலை, பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்களை வாங்குவதற்காக, சென்னை பாரிமுனையில் ஏராளமான மக்கள் குவிந்தனர். 

இதனால் பாரிமுனை முதல் பூக்கடை காவல் நிலையம் வரையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை சீரமைக்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.