பி.லிட் படிப்புக்கான பாடத் திட்டத்தை மாற்றக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பி.லிட் படிப்புக்கான பாடத்திட்டத்தை மாற்றாமல் தொடர அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்றாண்டு கால பி.லிட் படிப்பின் முதல் இரு ஆண்டுகளில் பொதுத்தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் பாடங்கள் சேர்க்கப்பட்டு தமிழ் இலக்கியம் தொடர்பான 8 பாடத்தாள்கள் நீக்கப்பட்டிருப்பது தமிழுக்கு செய்யும் அநீதி என்று கூறியுள்ளார்.
எனவே, பி.லிட் படிப்புக்கான பாடத் திட்டத்தை சிதைக்காமல், இப்போதுள்ள நிலையிலேயே தொடர அனுமதிக்க வேண்டும் என்றும், அரசு வேலைவாய்ப்புகளில் பி.லிட் கல்வித் தகுதியை பி.ஏ தமிழ் இலக்கியப் பட்டத்திற்கு இணையான கல்வித்தகுதியாக அறிவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்