baby python found dead 
தமிழ்நாடு

ஆங்காங்கே இறந்து கிடக்கும் மலைப்பாம்பு குட்டிகள் - கதிகலங்கி நிற்கும் குமரி மக்கள் - ஒளிந்திருக்கும் பீஸ்ட் "பெரிய மலைப்பாம்பு" எங்கே?

பெரிய மலைப்பாம்பு அங்கு பதுங்கி இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது...

மாலை முரசு செய்தி குழு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 49 -வது வார்டு பறக்கை,செட்டித்தெரு குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு குட்டிகள் ஆங்காங்கே இறந்து கிடந்ததால் அப்பகுதி மக்கள் அச்சம்-அப்பகுதியில் பல்வேறு இடங்கள் புதர்மண்டி கிடப்பதால் பாம்புகளின் வாழ்விடமாக மாறி உள்ளது. 

இதனால் பெரிய மலைப்பாம்பு அங்கு பதுங்கி இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாம்பு முட்டையிட்டு குஞ்சு பொரித்து வெயிலின் தாக்கத்தால் இறந்திருக்கும் என முதற்கட்ட தகவல் தெரியவந்துள்ளது. எனவே பொதுமக்கள் அங்கு பதுங்கியுள்ள மலை பாம்புகளை பிடிக்க வேண்டும் எனவும்  வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்