முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அமைச்சரவைக் கூட்டம்:
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர், வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று காலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து துறை அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும், விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டிய மசோதாக்கள் குறித்தும், இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.