தமிழ்நாடு

தரமான முறையில்  பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் : முதலமைச்சர் உத்தரவு...

தமிழ்நாடு முழுவதும் தரமான முறையில்  பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் மற்றும்  மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Malaimurasu Seithigal TV

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பண்டிகையை கொண்டாட கரும்புடன் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்ததாகவும், அதன்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதை தானே நேரில் சென்று ஆய்வு செய்ததாகவும், எனவே இந்த பணிகள் முறையாக நடைபெற்று வருவதையும், தரமான பொருட்கள் எவ்வித புகார்களும் இன்றி அனைவருக்கும் கிடைப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டுமெனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.